செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 18 மார்ச் 2022 (13:49 IST)

மகளின் பிறந்தாளை அமர்களப்படுத்திய ஆரி - கியூட்டான வீடியோ!

நடிகர் ஆரி தமிழில்  2010 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து நெடுஞ்சாலை , மாயா, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நாகேஷ் திரையரங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஓரளவுக்கு கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டாலும் இவர் பெரும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். இந்நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடி தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து டைட்டில் வென்றார். 
இந்நிலையில் தற்போது மகளின் பிறந்தாளை கொண்டாடிய ஆரி தனது திரைத்துறை நண்பர்கள், பிக்பாஸ் நண்பர்கள், குடும்பத்தினர் சூழ மகிழ்ச்சியாக கொண்டியுள்ளார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் மகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ...