செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 16 செப்டம்பர் 2020 (08:23 IST)

அட்லி-ஷாருக்கான் படம் குறித்து மீண்டும் வதந்தி: தீபிகா படுகோனே நாயகியாம்?

விஜய் நடித்த பிகில் படத்தை இயக்கிய அட்லி அதன் பின்னர் ஒரு வருடமாகியும் இன்னும் அடுத்த படம் கமிட்டாகவில்லை. அவர் ஷாருக்கான் படத்தை இயக்க இருப்பதாக அவ்வப்போது வதந்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அதே வதந்தி வெளிவந்துள்ளது 
 
ஷாருக்கான் படத்தை அட்லீ இயக்குவது உறுதி என்றும் இந்த படத்திற்காக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கால்சீட்டை ஷாருக்கான் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிற.து மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோனே தான் நாயகி என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
ஆனால் இவை எதுவுமே உண்மையான தகவல் மற்றும் உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை என்றும் ஷாருக்கான் படத்தை அட்லி இயக்குவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் ஷாருக்கான் வட்டாரங்கள் கூறுகின்றன 
 
ஷாருக்கான் தற்போது ராஜ்குமார் ஹிரானி படத்தில்தான் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை முடித்த பின்னர்தான் அடுத்த பட இயக்குநர் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. எனவே ஷாருக்கான்-அட்லி படம் குறித்து வெளிவந்த கொண்டே இருக்கும் அனைத்தும் வதந்தியே என்று திரையுலகினர் கூறிவருகின்றனர்