வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (11:12 IST)

வைரமுத்துவை ஒதுக்கிய ஏ ஆர் ரஹ்மான்… சிவகார்த்திகேயனுக்கு மட்டும் சலுகையா?

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் சில தினங்களுக்கு முன்னர் அளித்த ஒரு  நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகம் ஒன்றை தனக்கு செய்துள்ளதாக கூறி பரபரப்பைக் கிளப்பினார். அதில் “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனும் நானும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை. அடுத்த ஜென்மத்தில் அவர் ஹீரோவாக இருந்து நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.

அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். இது பற்றி நான் கேட்ட போது அவர் சொன்ன பதிலை இங்கு சொல்லவே முடியாது. அவர் செய்ததை சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். அதனால் என்னால் சொல்லமுடியாது” என ஆதங்கத்தோடு கூறியிருந்தார். இமானின் இந்த பேட்டி வைரல் ஆனதை அடுத்து சிவகார்த்திகேயன் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதனால் கடந்த சில மாதங்களாக பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இமான் –சிவகார்த்திகேயன் விவகாரம் பற்றி தொடர்ந்து பேசிவரும் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி இப்போது இந்த விவகாரம் பற்றி அயலான் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மானுக்கு தெரிந்திருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “கண்டிப்பாக ரஹ்மானுக்கு தெரிந்திருக்கும். இது சம்மந்தமாக அவர் சிவகார்த்திகேயனிடம் கேட்டிருப்பார். அவன் இமான் குற்றச்சாட்டை மறுத்திருப்பார். அதை ரஹ்மானும் நம்பியிருப்பார். வைரமுத்து சின்மயி விவகாரத்தில் வைரமுத்துவை ஒதுக்கிய ரஹ்மான், இந்த விவகாரத்தில் விசாரிக்காமல் முடிவெடுத்துவிட்டார் என்றே நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று அயலான் படத்தின் திரை வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்கிறார். அதில் ரஹ்மானும் சிவகார்த்திகேயனும் ஒன்றாக கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.