வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (16:08 IST)

பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை பேச்சு: இயக்குனர் மோகன் ஜி மீது இன்னொரு வழக்கு..!

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டு, உடனே விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது இன்னொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, "பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுகின்றன" என யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது கூறினார். இதனையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் திருச்சி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இந்த நிலையில், மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்தில் தேவஸ்தானம் சார்பில் புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், மோகன் ஜி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், "பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய புகார் காரணமாக, மீண்டும் மோகன் ஜி கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

Edited by Siva