1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2017 (05:23 IST)

மணிரத்னம் படத்தை அசால்ட்டாக அடித்து துரத்திய அறிமுக இயக்குனரின் படம்

பழம்பெரும் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய படம், மார்க்கெட்டில் முன்னணி இடத்தில் உள்ள கார்த்திக் நடித்த படம், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படம் என்று பல பெருமைகள் பெற்ற 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் வசூலை, அறிமுக இயக்குனரும் மிஷ்கின் உதவியாளருமான ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வசூல் முந்திவிட்டதாக செய்திகள் வெஇவந்துள்ளது.



 


மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளீயிடை' டெக்னிக்கலாக நல்ல படம் என்ற விமர்சனம் வந்தபோதிலும், திரைக்கதையில் பெரும் ஒட்டை இருப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் நேர்த்தியான திரைக்கதை, பொருத்தமான நடிகர்கள் என்று படத்தை இயக்கியிருப்பதால் மக்கள் மத்தியில் 8 தோட்டாக்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோலிவுட் திரையுலகில் தற்போது எண்ட்ரி ஆகும் இளைஞர்கள் சாதித்து வருகின்றனர் என்பது '8 தோட்டாக்கள்' திரைப்படம் இன்னொரு உதாரணம். இதற்கு முன்னர் 'துருவங்கள் 16' உள்பட ஒருசில படங்களின் மூலம் இளைஞர்கள் தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.