1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 29 நவம்பர் 2018 (18:26 IST)

2.o ஒளிபரப்பை நிறுத்திய திரையரங்கம்; ரசிகர்கள் அதிர்ச்சி

2.o வில் ரஜினி இண்ட்ரொடக்‌ஷன் போது படத்தை 3 நிமிடங்கள் நிறுத்தி வைத்துள்ளனர். 
 
ரஜினி நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படம் இன்று வெளியாகியுள்ளது. 
 
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே வேர லெவலில் இருந்த நிலையில் அவை அனைத்தையும் படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். பல்வேறு நாடுகளில் இந்த படம் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
 
இந்நிலையில் மும்பையில் உள்ள வாதாலா ஐமேக்ஸ் தியேட்டரில், ரஜினி இண்ட்ரொடக்‌ஷன் போது படத்தை 3 நிமிடங்கள் நிறுத்தியுள்ளனர். அப்போது ரசிகர்கள் ஆரவாரமாய் கரகோஷங்களை எழுப்பி தலைவா தலைவா என தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். ரஜினி மீதான மவுசு எக்காலத்திலும் குறையாது என்பதற்கு இந்த சம்பவம் மூலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.