திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (22:24 IST)

ஒன்றுகூடிய 1980களின் பிரபல நடிகர் - நடிகைகள்

1980களில் தென்னிந்தியாவில் பிரபலமாக இருந்த நடிகர் - நடிகைகள், ஒன்றாகக் கூடி மகிழ்வது கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் முக்கியமான நாளைத் தேர்ந்தெடுத்து, அந்த நாளில் கூடுவர். எப்போதும் ஒருநாளுடன் முடிந்துவிடும் இந்தச் சந்திப்பு, எட்டாவது ஆண்டான இந்த வருஷம் இரண்டு நாட்களாக நடைபெற்றது.
 
சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், பாக்யராஜ், ராஜ்குமார், அர்ஜுன், நரேஷ், பானுசந்தர், சுமன், சுரேஷ், ரகுமான் ஆகிய 12 நடிகர்களும், சுஹாசினி, குஷ்பூ, ராதிகா சரத்குமார், அம்பிகா, ராதா, ஜெயசுதா, பூனம் திலோன், பூர்ணிமா பாக்யராஜ், ரம்யா கிருஷ்ணன், பார்வதி ஜெயராம், சுமலதா, லிசி, ரேவதி, மேனகா, ஷோபனா, நதியா ஆகிய 16 நடிகைகளும் என மொத்தம் 28 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
மகாபலிபுரம் கடற்கரையை ஒட்டியுள்ள தனியார் விடுதியொன்றில் கூடிய இவர்கள் அனைவரும் ஊதா நிற ஆடைகளை அணிந்திருந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மட்டுமின்றி, ஆன்மீகம் உள்பட பல உருப்படியான விஷயங்களையும் பேசி மகிழ்ந்திருக்கின்றனர்.