திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (17:18 IST)

’’பவுடர்’’-ல் 18 வித கதாப்பாத்திரங்கள்….முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வித்யா பிரதீப்

தாதா 87 என்ற படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீஜி. இவரது இயகத்தில் அடுத்து உருவாகிவரும் படம்  பொல்லாத உலகில் பயங்கரகேம்.

கொரொனாகால ஊரடங்களில் சில தளர்வுகள் உள்ளதால் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இப்படத்தின் முதன்மைக் நாயகியாக வித்யா பிரதீப் நடிக்கிறார்.  இவருடம் மனோபாலா, வையாபுரி , ஆதவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இது திரில்லர் கலந்த காமெடிப் படமாக இருக்கும் என்று இப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; மக்கள் தங்கள் உண்மையான முகத்தை மறைத்துப் போலியான முகப்பவுடர் பூசி வாழ்ந்து வருகின்றனர். இப்படத்தில் 18 கேரக்டர்கள் உள்ளன.இதை நாம் நமது வாழ்க்கையில் கடந்து வந்திருப்போம் ! இந்தப் பவுடர் முகம் மட்டுமல்ல உடலுக்கும் கேடுஎன்று தெரிவித்துள்ளார்