1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 27 அக்டோபர் 2020 (08:23 IST)

பிக்பாஸ் வரலாற்றில் நாமினேஷனில் 11 பேர்: தப்பித்த ஐவர் யார்?

பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக 11 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் உள்ளனர் என்பதும் ரேகா மட்டுமே வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நாமினேஷன் படலத்தில் மொத்தம் உள்ள 16 பேர்களில் ஐந்து பேர்களை தவிர மீதி 11 பேர் நாமினேஷன் சிக்கியுள்ளனர் 
 
நாமினேஷன் செய்யப்பட்ட 11 பேர்கள் பின்வருமாறு: சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன். இதனால் நாமினேஷனில் சிக்காதவர்கள் அர்ச்சனா, சம்யுக்தா, ஆரி, கேப்ரில்லா, ஷ்வானி என்பது குறிப்ப்பிடத்தக்கது. அர்ச்சனா இந்த வார கேப்டன் என்பதால் நாமினேஷனில் சிக்கவில்லை.
 
பிக் பாஸ் வரலாற்றில் அதிக பட்சமாக ஐந்து அல்லது ஆறு பேர் மட்டுமே நாமினேஷன்  செய்யப்படுவது உண்டு. ஆனால் இந்த வாரம் திடீரென 11 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருப்பது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
இந்த வாரம் ஆஜித், சனம்ஷெட்டி, அனிதா, வேல்முருகன் ஆகிய நால்வரில் ஒருவர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வாரம் 11 பேர்கள் நாமினேஷன் சிக்கியுள்ளதால் ஓட்டுகள் அதிகமாக பிரிய வாய்ப்பு உள்ளது என்பதும் வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை கணித்து சொல்ல முடியாத வகையில் இருப்பதாகவும் பார்வையாளர்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்