விநாயகர் சதுர்த்தியை குறி வைக்கும் உத்தம வில்லன்

Uthama Villan
John| Last Modified புதன், 9 ஏப்ரல் 2014 (11:51 IST)
விஸ்வரூபம் 2 படத்தை தள்ளி வைத்து உத்தம வில்லனில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார் கமல். ஏன் இந்த திடீர் மாற்றம்?
விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உள்ள திருமணம் என்னும் நிஹ்கா விரைவில் வெளியாகிறது. ஷங்கரின் ஐ படமும் இவரின் தயாரிப்பே. ஐ க்கு அளவுக்கதிமான பணத்தை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. ஐ வெளியான பிறகே அவரால் விஸ்வரூபம் 2 -வை வெளியிட முடியும்.
 
அந்த இடைவெளியை பில்லப் செய்யும் விதமாகவே உத்தம வில்லன் படத்தை அவசரமாகத் தொடங்கி அதிவேகமாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டுள்ளார் கமல். ஆகஸ்ட் 29 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு படத்தை வெளியிடுவதுதான் கமலின் திட்டம். விஸ்வரூபம் 2 அதன் பிறகு தீபாவளி வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
உத்தம வில்லனில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, கே.விஸ்வநாத், பாலசந்தர், ஜெயராம், நாசர், ஊர்வதி, பார்வதி மேனன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :