செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 3 மே 2014 (19:19 IST)

ரஜினி படத்தில் சந்தானம்...?

ரஜினி படங்களின் வெற்றியில் நகைச்சுவைக்கு கணிசமான பங்கிருக்கும். சந்திரமுகி அதற்கு சிறந்த உதாரணம். ரஜினி, வடிவேலு காம்பினேஷன் காட்சிகள்தான் இன்றும் சந்திரமுகியில் நினைவில் நிற்கின்றன.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்காவில் காமெடி போர்ஷனை கவனிக்கப் போகிறவர் யார்?
 
இந்தக் கேள்விக்கு ரவிக்குமாரும், ரஜினியும் டிக் செய்திருப்பது சந்தானத்தை என்கின்றன தகவல்கள். எவ்வளவு நாளைக்குதான் அடுத்தவன் லவ்வுக்கு உதவி செய்றது என்று சந்தானமே இப்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். எனக்கு யாரும் தேவையில்லை, என்னை நம்பி பணத்தை போடுங்க என்று ஆனானப்பட்ட பிவிபி சினிமாவிடமே தொடை தட்டியிருக்கிறார்.
அப்படிப்பட்டவர் ரஜினி படத்தில் நடிப்பாரா இல்லை நானே இப்போ ஒரு மெகா ஸ்டார்தான் என்று பன்ச் பேசுவாரா?