மெட்ராஸில் மேக்கப் இல்லாமல் நடித்த கேத்ரின் தெரேஸா

katherine theresa madras
Ravivarma| Last Modified வெள்ளி, 27 ஜூன் 2014 (17:48 IST)
கேரளாவில் உள்ள கோட்டயத்தில் பிறந்து துபாயில் வளர்ந்து கன்னடப் படத்தில் அறிமுகமானவர் கேத்ரின் தெரேஸா. கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்தவர் இப்போதுதான் மெட்ராஸ் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். நல்ல செய்தி என்னவென்றால், முதல் படம் வெளியாகும் முன் அதர்வா நடிக்கும் கணிதன் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
மெட்ராஸ் படத்தில் கலை என்ற வடசென்னை பெண்ணாக கேத்ரின் தெரேஸா நடித்துள்ளார். வடசென்னை பெண்ணாக கேத்ரினா? அவரின் புகைப்படத்தைப் பார்க்கும் யாருக்கும் இப்படியொரு ஆச்சரியம் எழும். ஆனால் படத்தில் அது தெரியாத அளவுக்கு அவரை மாற்றியுள்ளார் இயக்குனர் இரஞ்சித். முக்கியமாக படத்தில் மேக்கப்பே போட அனுமதிக்கவில்லையாம். 
 
வழக்கமான தமிழ்ப்பட ஹீரோயின் போன்று வெறுமனே டூயட் மட்டும் ஆடிவிட்டுப் போகாமல் ஹீரோவுக்கு உறுதுணையாக வரும் பவர்ஃபுல் வேடமாக கேத்ரினின் கதாபாத்திரத்தை இரஞ்சித் உருவாக்கியுள்ளார். காளி என்ற கார்த்தியின் கதாபாத்திரத்துக்கு சமமாக வருகிறதாம் கேத்ரினின் கலை கதாபாத்திரம்.
 
வடசென்னையை மையப்படுத்தியது என்பதால் வடசென்னை பாஷையில் பேச முயற்சி செய்திருக்கிறார். கணிதன் முடியும் போது தட்டுத் தடுமாறி கேத்ரின் தமிழ் பேசக்கூடும். அதற்கான முயற்சி அவரிடம் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :