செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 7 மே 2014 (19:42 IST)

முகூர்த்தம் தவறிவரும் திருமணம் எனும் நிஹ்கா

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயா‌ரித்திருக்கும் படங்களில் இரு படங்கள் ‌ரிலீஸுக்கு தயாராக உள்ளன. திருமணம் எனும் நிஹ்கா, பூலோகம். அதில் நிஹ்கா தொடங்கி பல வருடங்கள் ஆகிறது. ஒருவழியாக மே 15 படத்தை வெளியிடுகின்றனர்.
மே 15 வியாழக்கிழமை. திரையுலகுக்கு முகூர்த்த நாள் என்றால் வெள்ளிக்கிழமை. அன்றுதான் படங்கள் வெளியாகும். ஆனால் மே 16 வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்பதால் ஒருநாள் முன்னதாக படத்தை வெளியிடுகின்றனர். மே 16 வெளியிட்டால் தேர்தல் முடிவு பரபரப்பில் நிஹ்காவை அனைவரும் புறக்கணித்துவிட வாய்ப்புள்ளது.
 
ஜெய், நஸ்‌ரியா நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அனீஸ் இயக்கியுள்ளார். சென்சார் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.