மரண அடி... பார்த்திபனின் எச்சரிக்கை

மரண அடி... பார்த்திபனின் எச்சரிக்கை
Geetha Priya| Last Updated: திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (13:29 IST)
வித்தியாசமாக விளம்பரம் செய்வதில் பார்த்திபன் கெட்டிக்காரர். அடுத்தவர்களின் படங்களுக்கே ஆலோசித்து பஞ்சாக அடிப்பவர் தனது சொந்த தயாரிப்புக்கு எவ்வளவு மெனக்கெடுவார்?
தொடர் தோல்விகளுக்குப் பிறகு இவர் தயாரித்து இயக்கியிருக்கும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஆக.1 படத்தை வெளியிடுவதாக இருந்தவர் ஜிகிர்தண்டாவும், சரபமும் அதே தேதியில் வெளியானதால் ஆக. 29 -க்கு படவெளியீட்டை தள்ளி வைத்தார். ஆனால் அந்த தேதியில் நான்கு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. அதனால் ஆகஸ்ட் 15 அஞ்சானுடன் பார்த்திபன் படமும் திரைக்கு வருகிறது.
 
தமிழ்ப் படங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது திருட்டு டிவிடி. அது குறித்து அறிக்கை ஒன்றை பார்த்திபன் வெளியிட்டார். அதில் வரும் பஞ்ச் வரிதான் செய்தியின் தலைப்பில் நீங்கள் படித்தது.
 
நல்ல படங்களை தியேட்டரில் வந்து பாருங்கள், திருட்டு விசிடியில் பார்ப்பது எங்கள் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு சமம், மீறி பார்த்தால் தண்டிக்கப்படுவீர்கள், அதிலிருந்து தப்பித்தால் மரண அடி விழும்... விதி வசத்தால் - என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :