மணிமாறன் பொடியனில் த்ரிஷா, ஜெய்

Geetha priya| Last Modified திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (17:07 IST)
உதயம் என்எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் அடுத்து பொடியன் என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜெய்யுடன் த்ரிஷா நடிக்கிறார்.
சிறிது இடைவெளிவிட்ட த்ரிஷா மீண்டும் முழு வேகத்தில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மணிமாறன் தனது பொடியன் படத்துக்காக அவரை அணுகிய போது உடனே தனது சம்மதத்தை தெரிவித்தார். இந்தப் படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார்.

 
மணிமாறன் வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட். உதயம் படத்தின் மூலம் இயக்குனரான அவர், பொறியாளன் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதியுள்ளார். வெற்றிமாறனின் இன்னொரு அசிஸ்டெண்டான தனுகுமார் படத்தை இயக்கியுள்ளார்.
 
பொடியன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :