பெங்களூர் டேய்ஸின் ரீமேக் உரிமையை வாங்கிய பிவிபி - சித்தார்த், சமந்தா நடிக்கின்றனர்

Geetha Priya| Last Modified திங்கள், 28 ஜூலை 2014 (12:06 IST)
மலையாளத்தில் பம்பர்ஹிட்டான அஞ்சலி மேனனின் பெங்களூர் டேய்ஸின் தமிழ், தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் வாங்கியுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
பெங்களூரு டேய்ஸில் பகத் பாசில், நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், நிவின் பாலி, நித்யா மேனன், இஷா தல்வார், பார்வதி ஆகியோர் நடித்திருந்தனர். இளமை திருவிழாவாக எடுக்கப்பட்ட படம் திரையரங்குகளிலும் இளமைப் பட்டாளத்துடன் அதிரடியாக இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் தமிழ், தெலுங்கு ரீமேக்கை பொம்மரிலு படத்தை இயக்கிய பாஸ்கரன் இயக்க உள்ளார். பிவிபி தயாரிக்கிறது.
இதன் தமிழ் பதிப்பில் முக்கிய வேடத்தில் ஆர்யாவும், தெலுங்கில் நாக சைதன்யாவும் நடிக்கின்றனர். மலையாளப் படத்தில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் பகத் பாசிலும், நஸ்ரியாவும் கணவன் மனைவியாக நடித்தனர். அவர்களின் கதாபாத்திரத்தை இரு மொழிகளிலும் செய்யப் போவது, காதலிப்பதாக கிசுகிசுக்கப்படும் சித்தார்த், சமந்தா.
 
குயின் படத்தின் ரீமேக்கை தேறாது என்று விமர்சித்த சமந்தா பெங்களூர் டேய்ஸின் ரீமேக்கில் மறுப்பு தெரிவிக்காமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். 
 
காரணம் கதையா இல்லை காதலா?
 
 


இதில் மேலும் படிக்கவும் :