பார்த்திபனின் கதையில்லா படம் - குடும்பத்தோடு பார்க்கலாமாம்

Kathai
Ravivarma| Last Modified திங்கள், 14 ஜூலை 2014 (14:14 IST)
பார்த்திபன் இயக்கியிருக்கும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். படத்தை ஆரம்பிக்கும் போது, இந்தப் படத்தில் கதையே கிடையாது என்று பார்த்திபன் சொன்னது படத்தின் மீதான ஆவலை அதிகப்படுத்தியது. பிறகு ஒவ்வொரு நாளும் அதிரடிதான்.
ஆறு புதுமுகங்களுடன் ஆர்யா, அமலா பால், விஜய் சேதுபதி, தாப்ஸி என்று பிரபலமான நடிகர்கள் பலரை நடிக்க வைத்தார். ஒவ்வொருவருக்கும் என்ன வேடம் என்பது சஸ்பென்ஸ். இந்தப் படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை என்பது சர்ப்ரைஸ்.
 
தமன், விஜய் ஆண்டனி, அல்போன்ஸ் ஜோ‌சப், சத்யா, சரத் என்று ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். கடைசியாக வெளியான பார்த்திபனின் எந்தப் படமும் - நடித்ததும் இயக்கியதும் - சரியாகப் போகவில்லை. அவரின் வித்தியாசமான முயற்சிகளெல்லாம் ரசிகர்களை சென்றடையாத நிலையில் இந்தப் படம் வெற்றி பெறுமா என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். படத்தைப் பார்த்த சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்துள்ளனர்.
 
இதன் வெற்றியில்தான் பார்த்திபனின் திரை வாழ்க்கையின் திருப்புமுனை அமைந்திருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :