படங்கள் குவிக்கும் நடிகை

Ravivarma| Last Modified வெள்ளி, 9 மே 2014 (13:53 IST)
அட்டக்கத்தி படத்தின் மூலம் அறியப்பட்டவர் நந்திதா. தனது அழகாலும், நடிப்பாலும் யார்.. இந்தப் பெ‌ண் என்று சினிமாக்காரர்களை கேட்க வைத்தவர். அதன் பின்னால் எதிர்நீச்சல் அதையடுத்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..? என இவர் நடித்த அடுத்தடுத்த படங்களும் வெற்றி பெற அதிர்ஷ்ட நாயகி என பெயர் பெற்றார். 
அதன் காரணமாக தற்போது விஷ்ணுவுக்கு ஜோடியாக முண்டாசுப்பட்டி மற்றும் நளனும் நந்தினியும், அஞ்சல் தொடர்ந்து இடம் பொருள் ஏவ‌ல் படத்திலும் நடித்து வருகிறார். இதுத‌விர இன்னும் பெயரிடப்படாத இரண்டு பட வாய்ப்பும் வந்திருக்கிறதாம். 
 
இதனால், கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தினாலும், தயாரிப்பாளர்கள் ஓடும் அளவுக்கு இல்லையாம். அதுவும் படப்பிடிப்பில் பந்தா எதுவும் பண்ணுவதில்லை. அதனாலேயே பல இயக்குனர்களுக்கு நந்திதாவைப் பிடிக்கிறதாம்.


இதில் மேலும் படிக்கவும் :