நந்தா பெரியசாமியின் ஜிகினா, நாயகன் விஜய் வசந்த்

Vijay Vasanth
Ravivarma| Last Modified வியாழன், 31 ஜூலை 2014 (14:47 IST)
ஒரு கல்லூரியின் கதையில் இயக்குனராக அறிமுகமான நந்தா பெரியசாமியின் அடுத்தடுத்தப் படங்கள் முதல் படத்தைப் போலவே சோபிக்கவில்லை. மாத்தியோசி, மிளகா எல்லாம் பெரும் தோல்வியை தழுவின. தோல்வி சரித்திரத்திலிருந்து மீண்டெழும் எண்ணத்தில் அவர் எழுதி இயக்கப் போகும் படம், ஜிகினா.
இந்தப் படத்தில் நாயகனாக விஜய் வசந்த் நடிக்க உள்ளார். நாயகி சானிய தாரா. இவர்களுடன் சிங்கம்புலி, கும்கி அஸ்வின் ஆகியோரும் நடிக்கின்றனர்.

சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. லிங்குசாமி கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

படத்துக்கு ஜோ‌ன் என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பாலாஜி ரங்கா. ராகுல் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.

இந்த வருடமே படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :