தெலுங்கு மஞ்சப்பையில் நடிக்கும் மெட்ராஸ் ஹீரோயின்

katherine theresa
Ravivarma| Last Modified திங்கள், 14 ஜூலை 2014 (15:11 IST)
மஞ்சப்பை வெளியான உடனேயே அதன் தெலுங்கு ரீமேக்கை நல்ல விலைக்கு தாசரி நாராயண ராவ் வாங்கினார். தெலுங்கில் மஞ்சப்பையை தானே இயக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.
மஞ்சப்பை படத்தை முதலில் தொடங்கியவர் இயக்குனர் சற்குணம். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பிறகு திருப்பதி பிரதர்ஸுக்கு படம் கைமாறியது. பிறகு திருப்பதி பிரதர்ஸே படத்தை வெளியிடவும் செய்தது.

திரையரங்கு வசூல், தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமைகளில் கணிசமாக சம்பாதித்த படம் ரீமேக் உரிமையிலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்து தந்தது. தெலுங்கில் தாசரி நாராயணராவ் மஞ்சப்பையை ரீமேக் செய்கிறார்.
இதில் விமல் நடித்த வேடத்தில் விஷ்ணு மஞ்சுவும், லட்சுமி மேனன் நடித்த வேடத்தில் மெட்ராஸ் படத்தில் கார்த்தி ஜோ‌டியாக நடித்த கேத்ரின் தெரேஸவும் நடிக்கின்றனர். ராஜ்கிரண் நடித்த வேடத்தில் தாசரி நாராயண ராவே நடிப்பார் என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :