1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: புதன், 23 ஏப்ரல் 2014 (11:26 IST)

தெனாலிராமன் ஏமாற்றம் - வருத்தத்தில் வடிவேலு

தெனாலிராமன் படத்தின் ஓபனிங் எதிர்பார்த்த அளவில் இல்லாதது வடிவேலுவை வருத்தமடைய வைத்துள்ளது.  

மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்த தெனாலிராமன் வெளியானது. தனது ரீஎன்ட்ரி பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று கதை தொடங்கி காட்சிகள்வரை அனைத்தையும் முன்னின்று செப்பனிட்டு படத்தை எடுத்தார் வடிவேலு. ஆனால் படத்தின் ஓபனிங் எதிர்பார்த்த அளவில் இல்லை.
 
சென்னை நகரில் தெனாலிராமன் முதல் மூன்று தினங்களில் 75 லட்சங்களையே வசூல் செய்துள்ளது. விஷாலின் நான் சிகப்பு மனிதனின் ஓபனிங் அளவுக்கே தெனாலிராமனுக்கும் வசூல் அமைந்துள்ளது. அதேநேரம் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே முதல் மூன்று தினங்களில் 1.41 கோடியை வசூலித்தது. ஏறக்குறைய ஒரு மடங்கு அதிகம்.
 
நேற்றிலிருந்து படத்துக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மூன்று முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதனால் பல திரையரங்குகளிலிருந்து தெனாலிராமன் தூக்கப்படுவதற்கான சாத்தியமும் உள்ளது. தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை.
 
தனது ரீஎன்ட்ரி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் வடிவேலு வருத்தத்தில் உள்ளார். தெனாலிராமன் வெற்றி பெற்றால் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பது என்ற அவரது முடிவை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதும் வடிவேலுவின் வருத்தத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.