தமிழில் இதுவரை சொல்லப்படாத கதை - அஜீத்தின் புதுப்படம் பற்றி இயக்குனர் சிவா

Ajith, Director Siva
Ravivarma| Last Modified திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (18:51 IST)
வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜீத். கௌதம் இயக்கும் படம் தயாரானதும் இந்தப் புதிய படம் ஆரம்பமாகிறது.
 
வீரம் படத்தின் போதே, அடுத்து நாம சேர்ந்து ஒரு படம் பண்ணணும் என்று சிவாவிடம் அஜீத் கேட்டுக் கொண்டார். சிலரைப் போல் வாக்குறுதி தந்து காக்க வைக்கும் பழக்கம் இல்லை அஜீத்திடம். கௌதம் படம் முடிந்ததுமே சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.
சிவா ஏற்கனவே அஜீத்திடம் ஒன்லைன் சொல்லி ஓகே வாங்கிவிட்டார். தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் கதை பற்றி கூறியவர், இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை இது என்றார்.
 
ஸ்கிரிப்ட் வேலை முடிந்ததும் படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டியதுதான் என்றும் சிவா தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :