ஜனனியின் புதிய டாட்டூ
டாட்டூ குத்துவது பேஷனாகி, இப்போது அதிகம் குத்துவது ட்ரெண்டாகி வருகிறது. ஸ்ருதி கால், கை, தோள் என்று சகல இடங்களிலும் டாட்டூ மயமாகி வருகிறார். அதேபோல் த்ரிஷா. அவர்களுடன் ஜனனியும் போட்டி போடுகிறார்.
இந்த வருட தொடக்கத்தில்தான் டாட்டூ கலாச்சாரத்தில் ஜனனி இணைந்தார். அவர் குத்திக் கொண்டது விநாயகர் டாட்டூ. தற்போது ஓம் என்ற டாட்டூவையும் குத்திக் கொண்டுள்ளார்.
விநாயகரை பிடிக்கும் என்பதால் அவரை டாட்டூவாக குத்திக் கொண்டாராம். அதே போல் ஓம் என்ற ஓங்கார மந்திரத்தையும். மற்றபடி இதில் சென்டிமெண்ட் எதுவும் கிடையாது என்றார்.
ஆமாம்... டாட்டூவில் ஏது சென்டிமெண்ட்.