செப்.20 கத்தி பாடல்கள் வெளியீடு - லண்டனில் பிரமாண்ட விழா

Geetha priya| Last Modified செவ்வாய், 29 ஜூலை 2014 (13:08 IST)
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தியின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20 -ம் தேதி லண்டனில் பிரமாண்டமாக நடக்க உள்ளது. படத்தில் நடித்த, பணியாற்றிய அனைவரும் இதற்காக லண்டன் செல்கின்றனர்.
கத்தியை தயாரித்திருக்கும் லைகா புரொடக்ஷனின் தலைமையகம் லண்டனில் உள்ளது. லைகா நிறுவனங்கள் லண்டனை மையமாக வைத்தே உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. லைகா சுபாஷ்கரனின் வீடும் லண்டனில்தான் உள்ளது. அதனால் லண்டனில் கத்தியின் பாடல்கள் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்துகின்றனர்.
 
கத்தியில் விஜய்யுடன் சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசை. விஜய் படத்துக்கு அவர் இசையமைப்பது இதுவே முதல்முறை. பாடல்கள் அனைத்தும் அட்டகாசமாக வந்துள்ளதாக படயூனிட் தெரிவிக்கிறது.
 
தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் கத்தியை தடை செய்ய வேண்டும் என சில மாணவர் அமைப்புகள் பிரச்சனையை கிளப்பியிருக்கும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும்விதமாக லைகா நிர்வாகிகள் வைகோ, நெடுமாறன் முதலானவர்களை சந்திக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
 
 


இதில் மேலும் படிக்கவும் :