செப்டம்ப‌ரில் விமல், சூரியின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

Ravivarma| Last Modified வியாழன், 5 ஜூன் 2014 (13:44 IST)
விமர், சூரி நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கி வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா செப்டம்பரில் திரைக்கு வருகிறது.
 
கண்டேன் காதலை, சேட்டை என ரீமேக் படங்களாக இயக்கிக் கொண்டிருந்த கண்ணன் சொந்தமாக எழுதிய கதை ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ரயிலில் ஏற்படும் சந்திப்புகளும், பிரச்சனைகளும் படத்தில் பிரதானமாகச் சொல்லப்பட்டுள்ளது. படத்தின் முதல்பாதி முழுக்க ரயிலில் நடக்கிறது.
இதில் விமலுக்கு ஜோ‌டி ப்ரியா ஆனந்த். கண்ணா லட்டு தின்ன ஆசையா விசாகா சிங்கும் படத்தில் இருக்கிறார். விமலுக்கு இணையான வேடம் சூரிக்கு. காமெடியை களமாகக் கொண்டு தயாராகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். படம் செப்டம்பரில் வெளியாகும்.
 
கண்ணனுடன் இணைந்து மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரித்து வருகிறார். இசை டி.இமான். ஒளிப்பதிவு பி.ஜி.முத்தையா. 
 
கண்ணனுக்கும், விமலுக்கும் இது திருப்புமுனை படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :