1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 4 ஜூன் 2014 (19:49 IST)

கேரளாவில் ஏதாவது நடக்குமா?

விஜய் வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் என்னமோ நடக்குது. விஜய் வசந்துடன் பிரபு, ரகுமான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இரண்டு தாதாக்களுக்கிடையே சிக்கிக் கொண்ட அப்பாவியின் கதைதான் என்னமோ நடக்குது.
தமிழகத்தில் சுமாராகப் போன இந்தப் படத்தை கேரளாவில் வெளியிடுகின்றனர். பொதுவாக தமிழின் முன்னணி நடிகர்களின் படங்கள் தமிழகத்தில் வெளியாகும் அதேநாள் கேரளாவிலும் வெளியாகும். சின்ன நடிகர்களின் படங்கள் இப்படி கேரளாவுக்கு எல்லை தாண்டுவதில்லை.
 
ஆனால் என்னமோ நடக்குது மலையாளிகளை கவரும் என்று படத்தை தயாரித்தவர்களுக்கு நம்பிக்கை. அதனால் வரும் 20 -ம் தேதி கேரளாவில் படத்தை வெளியிடுகின்றனர்.
 
விஜய் வசந்துக்கு தமிழில் பெரிய மார்க்கெட் இல்லை. என்னமோ நடக்குது அதனை மாற்றும் என்று நினைத்தால் அப்படி எதுவும் நடக்கவில்லை. கேரளாவிலாவது ஏதாவது நடக்குமா பார்க்கலாம்.