கமல் படத்தால் பாலா படத்தை இழந்த இசையமைப்பாளர்

Geetha Priya| Last Modified வியாழன், 12 ஜூன் 2014 (12:57 IST)
கமலின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களால் பாலா படத்தை இழந்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
சற்குணத்தின் வாகை சூடவா படம் ஜிப்ரானுக்கு நல்ல முகவரியாக அமைந்தது. சிறந்த மெலடி மட்டுமில்லை சிறப்பாக பின்னணி இசை அமைக்கவும் தன்னால் முடியும் என சில படங்களிலேயே நிரூபித்தார். விஸ்வரூபம் படத்தின் பின்னணி இசை அமைக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
 
தற்போது விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், அமரகாவியம் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கும் படத்துக்கு இசையமைக்க ஜிப்ரான் ஒப்பந்தமானார். ஆனால் தற்போது அந்தப் படத்திலிருந்து அவராகவே விலகியுள்ளார்.
 
சற்குணம் குறுகிய காலத்தில் படத்தை முடிக்க நினைக்கிறார். அந்த காலஅவகாசத்தில் கமல் படத்தையும் முடித்து சற்குணம் படத்துக்கும் இசையமைக்க இயலாது என்பதாலேயே இப்படியொரு முடிவை அவர் எடுத்துள்ளார்.
 
ஜிப்ரானுக்குப் பதில் வேறெnரு இசையமைப்பாளர் விரைவில் ஒப்பந்தமாக உள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :