ஏப்.26 விஜய் சேதுபதியின் வன்மம் ஆரம்பம்

John| Last Modified சனி, 19 ஏப்ரல் 2014 (15:07 IST)
வரும் ஏப்.26 விஜய் சேதுபதி நடிக்கும் வன்மம் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் ஆரம்பமாகிறது.
புறம்போக்கு, மெல்லிசை, இடம் பொருள் ஏவல், காவியத்தலைவன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அத்துடன் அவர் நடிக்கும் இன்னொரு படம்தான் வன்மம். நேமிசந்த் ஜபக், ஹித்தேஷ் ஜபன் தயாரிப்பு.
விஜய் சேதுபதியின் படங்களில் பிரதானமாக இருக்கும் நட்புதான் இந்தப் படத்துக்கும் அடிப்படை. விஜய் சேதுபதியின் நண்பராக வருகிறவர் கிருஷ்ணா. யட்சன் படத்தில் ஆர்யாவுடன் நடிக்கும் அதே கழுகு கிருஷ்ணா.

ஒரு தனி நபரின் மீது நாயகனுக்கு ஏற்படும் கோபத்தை நட்பு கலந்து சொல்லியிருக்கிறோம் என படம் குறித்து கூறினார் அறிமுக இயக்குனரான ஜெய் கிருஷ்ணா. இவர் கமல்ஹாசன் தொடங்கி சிம்புவரை பலரிடம் உதவி இயக்குனராக இருந்தவராம்.
வன்மத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி கிடையாது. கிருஷ்ணாவுக்கு உண்டு, சுனைனா.

ஏப்ரல் 26 ஆம் தேதி நாகர்கோவிலில் படப்பிடிப்பை தொடங்கி கன்னியாகுமரி, முட்டம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை தொடர இருக்கிறார்கள். கேரளாவில் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதில் மேலும் படிக்கவும் :