உதயநிதி படத்துக்கு இசை அனிருத்...?

Last Modified புதன், 16 ஏப்ரல் 2014 (17:20 IST)
உதயநிதி விரைவில் நடிக்க இருக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது.
உதயநிதியின் முதலிரு படங்கள் - ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் - ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளிவந்தன. சந்தானம், ஹாரிஸ் இருவரும் இல்லாமல் உதயநிதி படம் நடிக்க மாட்டார் என்ற நகைச்சுவை கோடம்பாக்கத்தில் பிரபலம்.

நண்பேன்டா படத்தில் நடித்து வரும் உதயநிதி அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன், அகமது ஆகியோரின் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்கிறார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் படத்தை உதயநிதி தயாரிப்பது உறுதி. ஆனால் அவர்தான் ஹீரோவா என்பது இன்னும் முடிவாகவில்லை.
என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமதுவின் அடுத்தப்பட ஹீரோ உதயநிதி. அதனை அகமதுவும் உறுதி செய்துள்ளார். நண்பேன்டாவுக்கு பிறகு இந்தப் படம் தொடங்குகிறது. இதில் ஹாரிஸுக்குப் பதில் அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக நம்பத்குந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முருகதாஸின் துப்பாக்கி படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்தார். ஆனால் முருகதாஸ் விஜய்யை வைத்து அடுத்து இயக்கி வரும் கத்தியில் ஹாரிஸ் இல்லை. அனிருத்தான் இசையமைப்பாளர். இதே மாற்றம் உதயநிதியின் படத்திலும் ஏற்படும் என்பதே கோடம்பாக்கத்தின், இன்று ஒரு தகவல்.


இதில் மேலும் படிக்கவும் :