அறிமுகப் பாடல் - வேட்டையாடி விளையாடப் போகும் அஜீத்?

Ajith
Ravivarma| Last Modified திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (16:43 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடப்படாமல் உள்ளது. அதேநேரம் படப்பிடிப்பு அறுபது சதவீதம் முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் அஜீத்துக்கு இரண்டு கெட்டப்புகள். நிகழ்காலத்தில் அஜீத்துடன் அனுஷ்காவும், பிளாஷ்பேக் காட்சியில் அஜீத்துடன் த்ரிஷாவும் நடித்துள்ளனர். இரண்டு நாயகிகள் இருந்தாலும் அஜீத்துக்கு யாருடனும் டூயட் இல்லை என்று அதிர்ச்சியான தகவல் ஒன்று உலவுகிறது. அதே நேரம் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு வைத்த, கற்க கற்க பாடல் போன்று அட்டகாசமான அறிமுகப் பாடலை அஜீத்துக்கு வைக்க கௌதம் திட்டமிட்டுள்ளதாக‌த் தெரிகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்கிறார். இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்று சேர்ந்திருப்பது முக்கியமானது.


இதில் மேலும் படிக்கவும் :