வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்
Written By வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்
Last Updated : வியாழன், 3 மார்ச் 2016 (15:39 IST)

மக்கள் நல கூட்டணி நிலைமை இதுதான்! விஜயகாந்த் வருவாரா?

மக்கள் நல கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் பாடுபட்டு வருகின்றது.


 


 
மக்கள் நல கூட்டணில் இடம் பெற்றுள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்ஸிட்டு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
அத்தடன், தங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வரவேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றது.
 
சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விஜயகாந்த்துடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மக்கள் நல கூட்டணியைச் சேர்ந்தவர்கள்தான்.
 
பொதுவாக மக்கள் நல கூட்டணியில் உள்ளவர்கள் மீது ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.


 

 
கம்யூனிஸ்ட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள், மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள், மக்களுக்காக போராடுபவர்கள் என்ற கருத்து பொதுவாக காணப்படுபவை.
 
இதேபோல, வைகோ மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. அவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல மக்களின் நலனில் அக்கறை கொண்வர் என்ற எண்ணம் பரவலாகக் காணப்படுகின்றது.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி, தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்காக குரல் கொடுப்பதுடன் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள கட்சி என்று பேசப்படுகின்றது.
 
இந்த சேர்க்கை பொதுவாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாகவும் மதவாத சக்திகளுக்கு எதிராகவும் அமைந்த ஒரு மூன்றாவது கூட்டணியாக உள்ளது.


 

 
இந்நிலையில், தங்களுக்கு உள்ள நற்பெயரைப் பயன்படுத்தி, மக்கள் மனதில் இடம்பிடித்து வாக்குகளை பெறுவதற்காக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த கூட்டணி கலைந்துவிடும் என்றும், தேர்தல்வரையில் நீடிக்காது என்றும் பலரும் பேசியபோது, அந்த கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தேமுதிக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பது முடிவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதனால், தங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்று எதிர்பார்த்திருந்த மக்கள் நலக்கூட்டணியினர்  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


 

 

 
மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தால் அதிக வாக்குகளை பெறுவதற்குத் துணையாக அமைந்திருக்கும். ஏனென்றால் தேமுதிக மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.
 
அத்துடன், விஜயகாந்த் மனதில் பட்டதை அப்படியே பேசும் நல்மனம் கொண்டவர் என்ற பேச்சு மக்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், மக்கள் நல கூட்டணியினர்  தங்கள் கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். 


 

 
தற்போது அவர்களின் பிரச்சாரம் 3ஆம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜயகாந்த் இல்லை என்றாலும் அவர்களின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்திருப்பதாக கூறப்படுவகின்றது.

எனவே, விஜயகாந்த் தங்களை கைவிட்டாலும், மக்கள் தங்களை கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த கூட்டணி தொடர்ந்து தங்கள் பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.