1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. வெ.சுரேஷ் வெங்கடாச்சலம்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2016 (15:21 IST)

திமுக கூட்டணியில் தேமுதிக, பாஜக தீவிர பேச்சுவார்த்தை?

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துவருகின்றது.


 

 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தேமுதிக ஆகிய கட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையின் போக்கில் மாற்றங்கள் தெரிகின்றன.
 
தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது? என்ற கேள்வி தொடர்ந்து நீடித்து வருகின்றது.
 
இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
 
தேமுதிகவிற்கு மக்கள்நல கூட்டணியினர் தொடர்ந்து அழைப்பு விடுத்துவருகின்றனர். ஆனால், விஜயகாந்தி மக்கள்நல கூட்டணிக்குச் சென்றால் ஆட்சியில் பங்குபெருவதற்கான வாய்ப்பு குறைந்துவிடும் என்று கருதுவதாக தெரிகிறது. 
 
பாஜக, திமுக ஆகியவை விஜயகாந்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.


 

 
இந்நிலையில், மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, திமுக கூட்டணியில் இடம்  பெறுவது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
 
திமுகவினர் தங்கள் கூட்டணியில் பாஜக இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக தெரிகிறது.
 
ஆனால் திமுக கூட்டணியை விட்டுக் கொடுத்தால் தங்கள் பலம் குறைந்துவிடும் என்று காங்கிரஸ் கருதுவதால், கட்சியின் மேலிடத்தில் இருந்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆட்களை அனுப்ப உள்ளது.
 
அதிமுக ஆட்சியின் மீது பரவலாக அதிருப்தி நிலவுவதாக கூறப்படுவதால் திமுக கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக கருத்துகள் உலவுகின்றன.
 
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, தேர்தலுக்கு பிந்தய கூட்டணி என்று கூட்டணிகள் பலவகையில் அமைய வாப்பிருக்கிறது.
 
ஆனால், தற்போதய நிலையில் அதிமுகவை எதிர்க்க தேமுதிக தங்கள் பலத்தை முழுவதுமாக திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளதால், விஜயகாந்ந் திமுக கூட்டணியில் தங்கள் கட்சியை இடம்பெறச் செய்தால், அது அந்தக் கட்சிக்கும் தனது கூட்டணிக்கும் பெரும் பலமாக அமைய வாய்ப்பாக அமையலாம்.


 

 
திமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றால், காங்கிரஸ் கட்சி தனித்து விடப்படும் நிலை உருவாகலாம்.
 
இதனால், காங்கிரஸின் பலம் முன்பிருந்ததைவிடவும் குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த குழப்பங்களுக்கு தெளிவான விடை கிடைக்க இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.