உடலில்தான் ஆண் பெண் வித்தியாசம், கற்பனையில், திறமையில் உழைப்பில் எந்த வித்தியாசமும் இல்லை - ரஜிதா ( பேட்டி)

Suresh| Last Updated: வெள்ளி, 30 ஜனவரி 2015 (11:41 IST)
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் 'நாளைய இயக்குனர் சீசன் ஐந்து' குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து ஏழு ரவுண்டுக்கு ஏழு படங்களை தயாரித்து இயக்கிய ரஜிதா கல்பிரதா, ஒவ்வொரு ரவுண்டிலும் ஒவ்வொரு படத்தின் மூலமும் சிறந்த படம் சிறந்த இயக்கம் இப்படி குறைந்தது ஏதாவது ஒரு பிரிவிலாவது முதல் பரிசை வென்றார்.


 
(சில படங்கள் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை, சிறந்த நடிப்பு என்று எல்லா பிரிவுகளிலும் முதல் பரிசை மூட்டை கட்டி தூக்கிக் கொண்டும் வந்திருக்கிறது)
 
இறுதிப் போட்டிக்கு இவர் இயக்கிய லைன் ஆஃப் கண்ட்ரோல் என்ற குறும்படம் எல்லோரின் ஏகோபித்த பாராட்டுதலுக்கும் ஆளாகி எல்லா பிரிவுகளிலும் முதல் இடத்தில் வந்து, ஒட்டுமொத்த அளவில் இந்த நாளைய இயக்குனர் சீசன் ஐந்தின் 'டைட்டில் வின்னிங்' படமாகவும் வந்திருக்கிறது.
 
யார் இந்த  கல்பிரதா? இவர் எந்த சினிமா பிரபலத்தின் வாரிசு? எவ்வளவு பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்து காசு செலவு செய்து சினிமா கற்றுக் கொண்டவர்?
 
எந்த பிரபல இயக்குனரிடம் எத்தனை வருடம் பணியாற்றியவர்? என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது அல்லவா? அப்படி இந்த பின்புலமும் இல்லாதவர் இந்த ரஜிதா என்பதுதான் பாரட்டுக்குரிய ஆச்சர்யம். முதலில் கொஞ்சம் ரஜிதா கல்பிரதாவின் நதிமூலம் ரிஷிமூலம் கேட்போம்.
 
"அப்பா வங்கி அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரண்டு சகோதரர்கள் மற்றும் நான். இதுதான் எனது குடும்பம். மாலையில் பள்ளிக் கூடம் முடிந்து, பிடித்த தோழியிடம் நாளைக்கு சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தால்.... அப்பா அம்மா இருவரும் பெட்டியைக் கட்டிக்கொண்டு இருப்பார்கள்.
 
அப்பாவுக்கு ஏதோ ஊர் விட்டு ஊர் அல்ல... மாநிலம் விட்டு மாநிலம் டிரான்ஸ்ஃபர் ஆகி இருக்கும். இப்படியாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, வெஸ்ட் பெங்கால், மத்தியபிரதேச மாநிலங்களில் என் பள்ளி வயது கழிந்தது.
 
இதனால் எனக்கு நிரந்தர பள்ளித் தோழர்கள் என்று யாருமே இல்லாமல் போய் விட்டது. ஒரு மாநிலத்தில் ஒரு பள்ளியில் படிக்கும்போது சில ஃபிரண்ட்ஸ் அமைந்து பழக ஆரம்பிக்கும்போதே, அவர்களைப் பிரிய வேண்டி இருக்கும். கொஞ்ச நாள் கடிதம் போடுவேன். அப்புறம் அதுவும் இல்லாமலே போய்விடும்.
 
இந்த நிலையில்தான் எனக்கு ஒரு பிறந்த நாள் பரிசாக, அப்பா கேமரா வாங்கித்தர விரும்பினார். ஆனால் அம்மா செயின் வாங்கித்தரச்  சொன்னார். ‘நகை வாங்குவது இன்வெஸ்ட்மென்ட் மாதிரி. கேமரா எதுக்கு?' என்பது அம்மாவின் கருத்து. ஆனால் அப்பா சொன்னது வேறு. 'நகையை விட கேமராதான் பெரிய இன்வெஸ்ட்மென்ட். இது ஒரு கலை, அறிவு, தொழில்' என்பது அவரது கருத்து.
 
எனக்கும் கேமராவே பிடித்தது. இப்படியாக அப்போதே நான் கேமரா பக்கம் சாய்ந்தேன். கேமராவில் கண்டதை படம் பிடிப்பது, அப்புறம் அதை பிரின்ட் போடுவதிலேயே அப்பாவின் வருமானம் காலியானது என்று வைத்துக் கொள்ளுங்களேன்."என்றார். 
 
ஸ்டில் கேமராவில் இருந்து மூவி கேமராவை நோக்கி முன்னேறியது எப்படி?  
 
“ஒருவழியாக பள்ளிப் படிப்பு முடிந்த போது சென்னைக்கு வந்தோம். இங்கே கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் பி.ஏ. எக்கனாமிக்ஸ் படித்தேன். அதில் முதல் மொழி ஆங்கிலம். இரண்டாவது மொழி இந்தி. அடிப்படையில் என் அப்பா வட இந்தியர். அம்மா தெலுங்கு. அதனால் மூணாவது மொழி தெலுங்குதான் எடுக்கவேண்டும் என்று அம்மா கட்டளை போட்டு விட்டார். நானும் அப்படியே எடுத்தேன். ஆனால் என் எண்ணம் எல்லாம் தமிழின் மீதே இருந்தது. தமிழ் வார்த்தைகள், ஒலி எல்லாம் என்னை அப்படி ஈர்த்தது.
 
கல்லூரியில் எனது வகுப்பில் தெலுங்கு புரஃபசர் பாடம் நடத்திக் கொண்டு இருப்பார். பக்கத்தில் தமிழ் வகுப்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மனைவி தமிழ் வகுப்பு எடுத்துக் கொண்டு இருப்பார். நான் ஏக்கத்தோடு....


இதில் மேலும் படிக்கவும் :