1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (13:35 IST)

நடிகர் சங்கத்தில் ஒரு குண்டூசிக்கும் கணக்கு உள்ளது - விஷால் பேட்டி

நேற்று விமரிசையாக பிறந்தநாளை கொண்டாடினார் விஷால். மகிழ்ச்சியான அந்த நேரத்திலும், குடைச்சலான கேள்விகள்தான் அவரை மொய்த்துக் கொண்டிருந்தன. சிலர் திட்டமிட்டு உருவாக்கிய ஊழல் புகாருக்கு பிறந்தநாளிலும் திறந்த மனதுடன் பேட்டியளித்தார்.


 
 
துணை நடிகர்களுக்கு வேலை கொடுப்பதில்லைங்கிற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
 
அப்படியொரு குற்றச்சாட்டை திடீர்னு வச்சிருக்காங்க. அதுல ஒரு சின்ன திருத்தம். இந்த நடிகர் சங்கம் செயல்படுறதே துணை நடிகர்கள் மற்றும் நடிகர்களுக்கு வேலை கொடுப்பதற்குதான். 
 
புதிய நிர்வாகிகளின் சாதனைன்னு எதைச் சொல்வீங்க?
 
நாங்க குருதட்சணை திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கொடுத்திட்டு வர்றோம். கிட்டத்தட்ட 16 ஹீரோக்கள் சேர்ந்து மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியமா தந்திட்டிருக்கோம். 70 வயசுக்கு மேல் உள்ளவங்களுக்கு இதை தர்றோம். 
 
துணை நடிகர்களுக்கு உடனே சம்பளம் கிடைக்கிறதில்லைன்னு சொல்றாங்களே?
 
முன்பெல்லாம் ரசீதை வச்சுகிட்டு அஞ்சு வருஷம், பத்து வருஷம் அலைஞ்சுகிட்டிருந்தாங்க. ஆனா, நாங்க, தயாரிப்பாளர்கள் உடனடியா சம்பளம் கொடுத்தால்தான் அவங்க வீட்ல அடுப்பெரியுங்கிறதை புரிய வச்சோம். இப்போ அவங்களுக்கு உடனடியா சம்பளம் கிடைக்குது.
 
உங்களுக்கு பதவி ஆசைன்னு சொல்றாங்களே?
 
சர்ச்சைக்குரிய நபர்கள் தேவையில்லாம வதந்தியை கிளப்புறாங்க. துணை நடிகர்களுக்கு பதவி கிடைக்கணுமங்கிறதுக்காகத்தான் நாங்க பதவிக்கு வந்தேமோ தவிர, எங்களுக்கு பதவி ஆசையில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டும்வரை போராடுவோம். அதற்குப் பிறகு துணை நடிகர்களின் வாழ்க்கை பிரகாசமடையும்.
 
ஊழல் புகார் குறித்து உங்க விளக்கம்?
 
நாங்க பதவியேற்று ஒரு வருஷம் ஆகப்போகுது. இங்க ஒரு குண்டூசிக்குக்கூட கணக்கு இருக்கு. நாங்க ஒரு பேனா வேணும்னு நடிகர் சங்கத்தில் இருந்து எடுத்தக்கூட பொருளாளர் கார்த்தி விடமாட்டார். ஏன்னா, அவர் சிவகுமார் அய்யா குடும்பத்திலயிருந்து வந்தவர். இங்க ஊழலுக்கே இடமில்லை.