செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (05:22 IST)

சர்வதேச விசாரணையே நீதியை பெற்றுத்தரும்: கத்தோலிக்க குருமார்களின் துணிச்சல்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மட்டுமே நீதியைப் பெற்றுத்தரும் என துணிச்சலுடன் ஐ.நா.சபைக்கு கடிதம் எழுதியுள்ளனர் கத்தோலிக்க குருமார்கள்.
 
இது குறித்து, வடக்கு-கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்கள் சுமார் 170 பேர் ஐ.நா. சபைக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர். 
 

 
அதில், இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை என்று முன்பு அமெரிக்கா போன்ற வல்லரவு நாடுகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. தற்போது, அந்த நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகி, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.
 
இலங்கையில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்றதால், அங்கு ஜனநாயகம் நிலைத்துள்ளதாகவும், அதனால், புதிய தேசிய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தரும் என்ற ஐ.நா. சபையின் தவறாக நம்பிக்கையும் வேதனை தருகிறது. 
 
இலங்கையில், உள்நாட்டு விசாரணைகளுக்கு உள்நாட்டிலே பெரும் எதிர்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆகையால், உள்நாட்டு விசாரணை என்பது சட்டப்படியும் சரி , மானிதாபிமான முறையில் நடைமுறை சாத்தியம் இல்லை.
 
இலங்கையில் தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்ளும் கலாச்சாரம் நீடித்து வருகிறது. அதற்கு சாட்டியாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவுக்கு ஃபீல்டு மார்ஷல் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதே இதற்கு சாட்சி. 
 
ஒற்றுமை இல்லாமல் சமாதானம் இல்லை. அந்த ஒற்றுமை ஏற்பட நீதியே சாலச்சிறந்தது. எனவே, சர்வதேச விசாரணையே நீதியை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
 
கத்தோலிக்க குருமார்களின் துணுச்சல்மிகு இந்த கடிதம் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.