திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2016 (05:32 IST)

இலங்கை சுதந்திர தினவிழால் தமிழில் தேசிய கீதம்

இலங்கை சுதந்திர தினவிழால் தமிழில் தேசிய கீதம்

விரைவில் நடைபெற உள்ள இலங்கை சுதந்திர தினவிழாவின் போது தமிழில் தேசிய கீதம் பாடப்பட உள்ளது.
 

 
இலங்கையின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி  கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், வரும் பிப்ரவரி 4 ம் தேதி அன்று கொண்டாடப்படும் சுந்திர தினகொண்டாடம் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட உள்ளது.
 
காரணம், அப்போது, இலங்கை தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது.
 
இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைச்சரவை துணைக் குழுவினால் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.