இலங்கை பிரதமராக 4ஆவது முறையாக ரனில் விக்ரமசிங்கே தேர்வு


K.N.Vadivel| Last Updated: சனி, 22 ஆகஸ்ட் 2015 (06:12 IST)
இலங்கை பிரதமராக 4ஆவது முறையாக ரனில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

இலங்கையில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி 106 இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்றது.
 
இலங்கையில், ஆட்சியமைக்க, மேலும் 7 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும், ரனில் விக்ரமசிங்கேவை ஆதரிக்க முன்வந்தது.
 
அதன்படி ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை சுதந்திர கட்சி இணைந்த தேசிய கூட்டணி அரசை அமைக்க இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டன. இதைத்தொடர்ந்து புதிய அரசு அமைய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
 

 
இதனையடுத்து, கொழும்புவில் அமைந்துள்ள அதிபரின் செயலகத்தில் காலை 9.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கேவுக்கு, அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கை பிரதமராக 4ஆவது முறையாக ரனில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டதற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதே போல, உலகத் தலைவர்கள் பலரும், ரனில் விக்ரமசிங்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :