’பிரபாகரன் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார்’ சொல்கிறார் மங்கள சமரவீர


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 28 நவம்பர் 2015 (19:28 IST)
தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று குறிப்பிட்டு ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக இலங்கை அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
மால்டாவில் நடைபெற்றுவரும் 24ஆவது காமன்வெல்த் நாடுகளின் வெளி விவகாரத்துறை அமைச்சர்களுக்கு உடையிலான சந்திப்பு நடைபெற்று வருகிறது.
 
அப்போது இது குறித்து பேசிய மங்கள சமரவீர, ’தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையில் மட்டுமே ஈடுபட்டதாகவும், மக்களின் எதிர்ப்பார்ப்பினைப் புரிந்து கொள்ளவில்லை’ என்றும் கூறினார்.
 
தொடர்ந்து உரையாற்றிய அவர், காமன்வெல்த் நாடுகளுக்கு மத்தியில் காணப்படும் இனவாதம் மற்றும் தீவிரவாதம் போன்றவற்றை தடுக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :