புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: விக்னேஸ்வரன் தகவல்

புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: விக்னேஸ்வரன் தகவல்


K.N.Vadivel| Last Updated: புதன், 1 ஜூன் 2016 (14:14 IST)
புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
 
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் அமைப்புக்களின் ஆதரவுடன் புதிய கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு தகவல் வெளியானது.
 
இது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகையில்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் என்னுடன் மிகவும் நட்பாகவே உள்ளார். அவருடன் நானும் நட்பில் உள்ளேன்.
 
மேலும், வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு சம்பந்தன் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே,  தமிழர்களுக்கு ஒரு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்க வழிவகை செய்வதில் இருவரும் உறுதியாக உள்ளோம். இதனால், தற்போதைய சூழ்நிலையில் புதிய கட்சி தேவையில்லை என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :