பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவு- வைகோ இரங்கல்


K.N.Vadivel| Last Updated: புதன், 23 டிசம்பர் 2015 (02:32 IST)
விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவுக்கு பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
 
விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், தேசியத் தலைவர் மேதகு தலைவர் பிரபாகரனின் முழு நம்பிக்கைக்கும் உரியவரான பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரனின் தாயார் செல்வநாயகி நடராஜா, கடந்த 19 ஆம் தேதி அன்று இரவு யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத மனவேதனை அடைந்தேன்.
 
அன்புச் சகோதரர் பேபி சுப்பிரமணியத்தைத் தமிழகத்தில் உள்ள ஈழஉணர்வாளர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். கசங்கிய அழுக்குச் சட்டையும், ஒரு நான்கு முழ வேட்டியும் அணிந்து கொண்டு, எளிமையின் வடிவமாக, ஈழத் தமிழர்களின் விடியலுக்காக தன்னையே அற்பணித்துக் கொண்டவர்.
 


இதில் மேலும் படிக்கவும் :