இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களின் சிறுநீரகம் திருட்டு: அதிர்ச்சித் தகவல்


Suresh| Last Updated: சனி, 2 ஏப்ரல் 2016 (14:44 IST)
இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது என்று அந்நாட்டு காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

 

 
சிலவாரங்களுக்கு முன்னர் இலங்கையில் வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்தாக 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்ட 8 பேர்களில் 6 பேரது சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது. இலங்கையில் உடல் உறுப்புகள் கொள்ளையில் இந்தியர்களின் சிறுநிரகம் அகற்றப்பட்டுள்ளது என்று கொழும்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் மோசடி நடப்பதாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
 
6 மருத்துவர்கள் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய காவல்துறையினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இலங்கை விசாரணையைத் தொடங்கியது.
 
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :