ஓரினச் சேர்க்கை வழக்கில் தேடப்பட்ட இங்கிலாந்து பாதிரியார் நீதிமன்றத்தில் ஆஜர்


Ashok| Last Updated: வெள்ளி, 27 நவம்பர் 2015 (20:04 IST)
பாலியல் புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஜோனாதன் ராபின்சன் நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் ஆஜராக உள்ளார்.

 

 
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள் புரத்தில் கிங்ஸ் வேர்ல்ட் டிரஸ்ட் என்ற அமைப்பை ஜோனதன் ராபின்சன் நடத்தி வந்தார். இவர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதாக வள்ளியூர் காவல் நிலையத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. 
 
இந்த புகாரின் அடிப்படையில் வள்ளியூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் காப்பகம் மூடப்பட்டது. போலீஸார் பாதிரியாரை கைது செய்ய முயற்சி செய்யும் போது, அவர் இங்கிலாந்திற்கு தப்பி ஓடிவிட்டார்
 
மூன்று ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பாதிரியார் ராபின்சன், வழக்கறிஞர் கிரகேரி ரத்தினராஜ் உடன் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி ரஷ்கின் ராஜ் மறுநாள் ஆஜராகும்படி தெரிவித்ததால், அவர் நாளை மீண்டும் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :