விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் மீதான தடை ரத்து


K.N.Vadivel| Last Modified திங்கள், 23 நவம்பர் 2015 (03:47 IST)
இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளின் மீதான தடை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
 
 
இலங்கை ராணுவத்துடன் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட போரில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த அமைப்புக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம், மகிந்தா ராஜபட்சே தலைமையிலான அரசு சுமார் 16 அமைப்புகளுக்கும், 424 தனிநபர்களுக்கும் தடை விதித்தது.
 
இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, புதிய அதிபரான சிறீசேனா, தமிழர் அமைப்புகளுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கினார்.
 
இதனையடுத்து, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட, 
பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனடா தமிழர் தேசிய சபை, தமிழ் தேசிய சபை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய 8 அமைப்புகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கின்றது. 


இதில் மேலும் படிக்கவும் :