வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அற்புத பலன்கள் தரும் சிவனுக்குரிய விரதங்கள்!

சிவ லிங்கத்தில் ஆரம்ப நாட்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடை பிடிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள்  மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவலிங்கத்தில் அமைக்கத் தொடங்கி விட்டனர்.
இந்து மதத்தில் கடைபிடிக்கப்ப்டும் விரதங்களும், பூஜைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் சிவனுக்கு உகந்த விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
 
பிரச்சனைகள் தீரவும், கோரிக்கைகள் நிறைவேறவும் சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியவை நிறைவேறும், 
 
சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அவையாவன:
 
1. சோமவார விரதம் - திங்கட்கிழமை தோறும்
2. திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை
3. மகாசிவராத்திரி - மாசி தேய்பிறை சதுர்த்தசி
4. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமி
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்
6. பாசுபத விரதம் - தைப்பூசம்
7. அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
8. கேதார விரதம் - தீபாவளி அமாவாசை.