1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (15:44 IST)

சனி பகவானை வழிபாடு செய்வதால் சனியின் தாக்கம் குறையுமா...?

சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு உகந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே. சனி பகவானுக்கு நம் மரபில் ஈஸ்வர பட்டம் சூட்டி தெய்வமாக வணங்குகிறோம்.


சனி பகவான் நவகிரகங்களில் மிக முக்கியமானவர் ஆவார். எப்பேற்பட்டவராக இருந்தாலும் ஏன் கடவுளாகவே இருந்தால் கூட சனியின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்பது ஐதீகம்.

எனவே ஒருவர் செய்யும் நல்ல வினை மற்றும் தீய வினைகளே சனி பகவான் நம் வாழ்வில் எந்த வகையில் பங்களிக்கிறார் என்பதை முடிவு செய்கிறது.
எப்போது சனி பகவானின் தாக்கம் நம் வாழ்வில் அதிகமாக இருக்கிறதோ அப்போது குறிப்பிட்ட பூஜைகளின் மூலம் நாம் சனிபகவானின் தாக்கத்திலிருந்து சிறிது விடுபட முடியும்.

சனி பகவான் பூஜை, விரதம் ஆகியவை பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் விரதமிருந்து அவருக்குரிய நெய்வேதியம், கருப்பு நிறத்திலான அர்பணிப்பு ஆகியவற்றை வழங்கி பூஜைகள் செய்வது வழக்கம்.

ஆனால் இதில் இருக்கும் ஒரு முக்கியமான சூட்சுமம் என்னவெனில் யாரும் சனிபகவானின் திருவுருத்தை அல்லது திருவுருவப் படத்தை வீடுகளில் வைத்து வழிபடுவதில்லை.