வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பைரவரை வழிபட்டால் சனிபகவான் கெடுபலன்கள் குறையுமா...?

அஷ்டமியில் மஹாவிஷ்ணுவின் கோகுலாஷ்டமி வழிபாடும் சிவபெருமானின் பைரவாஷ்டமியும் சக்தி வாய்ந்த வழிபாடாகும்.

பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். ஆகவே பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைரவரை வணங்கினால் ஆயூளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுகமாக வாழ வைப்பார். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகள் கஷ்டம் எதிரிகளை அழிப்பதுதான். மேலும் சனிபகவானின் குரு பைரவர்.
 
பைரவரை வழிபட்டால் சனிபகவான் கெடுபலன்கள் குறையும். பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள்.
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். 
 
அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.
 
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். 
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.
 
ஸ்ரீ பைரவருக்குப் பெளர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். 
 
பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம். பணியாற்றும் இடங்களில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம்.