1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மாசி மகத்தன்று புனித தீர்த்தங்களில் நீராடுவது பாவங்களை போக்குமா...?

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும்.

அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாசி மக திருநாளில் அனைத்து  திருக்கோயில்களிலும், தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறுகிறது.
 
சிவபெருமான் வருணனுக்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளில் தான். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம். இந்நாளில் புண்ணிய  ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது நம்பிக்கையாகும்.
 
நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மையைத் தரும். 
 
மாசி மகம் அன்று முறைப்படி விரதமிருந்து வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெறும். அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கான  சிறப்பு நாளாக மாசி மகம் அமைகிறது. எனவே இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.