1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தெய்வம் யார்? வழிபாட்டு பலன்கள் என்ன...?

ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து நல்லது.

உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்ணெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்) எண்ணிக்கையின் படி அன்னாதானம் செய்வதால், உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார்.
 
அஸ்வினி - கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில், அம்மன்: பெரியநாயகி
 
தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.
 
சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும்.