வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2025 (19:15 IST)

மார்ச் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – விருச்சிகம்!

Viruchigam
விருச்சிகம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -பஞசம  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - களத்திர  ஸ்தானத்தில் குரு -அஷ்டம  ஸ்தானத்தில் செவ்வாய் -லாப  ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:
04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.
09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.
14-03-2025 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

பலன்:
சொல் போல் செயலும் இருக்க வேண்டும் என்று செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. 

தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய  ஆர்டர்கள்  பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின்  நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி  உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

விசாகம்:
இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.

அனுஷம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.

கேட்டை:
இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.

 
பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்ப  பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்:  1, 2, 3, 29, 30