செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அக்னி மூலையில் எந்தெந்த அறைகளை அமைக்கக் கூடாது....?

பஞ்சபூதங்களில் முக்கியமாக கருதப்படும் நெருப்பு, மனித வாழ்வின் அடிப்படை தேவையாக இருக்கிறது. தென்கிழக்கு மூலையை தான் அக்னி மூலை என்று அழைப்பர்.
கற்காலம் முதலே நெருப்பின் பயன்பாடு மனிதனிடம் அதிகமாக காணப்பட்டு வந்தது. அவ்வாறு நெருப்பை வசமாக கொண்ட மூலை  தென்கிழக்கு மூலையாகும். இதனை “அக்னி மூலை” என்றும் கூறுவர். 
 
ஒரு வீட்டிலோ அல்லது தொழில் நிறுவனங்களிலோ தென்கிழக்கு மூலை பாதிப்படைந்தால் அந்த இடத்திற்கு தொடர்புடைய பெண்களின் உடல் நலம் மற்றும் மனவளம் கட்டாயம் பாதிப்படயும் என்பதினை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.
அக்னி மூலையில் சமையலறை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க முடியாமல் போனால் கிழக்கு முகமாக அமைக்கலாம் அல்லது அடுப்பு, எரிவாயு போன்றவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.
 
அக்னி மூலை நன்றாக அமைந்த வீட்டில் பெண் பிள்ளைகளும், வீட்டில் தலைவி ஆரோக்கியமாக இருப்பார்கள்.
 
தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவை:
 
* சமையறை கிழக்கு பார்த்தவாறு அமைக்கவேண்டும்.
* பூஜை அறை
 
தென்கிழக்கு மூலையில் வரக்கூடாதவை:
 
* குடும்ப தலைவன் அல்லது தலைவி படுக்கையறை
* பள்ளம், கிணறு, ஆழ்துளை கிணறு
* கழிவுநீர் தொட்டி
* கார் போர்டிகோ
* குளியலறை / கழிவறை
* உள்மூலை படிக்கட்டு
* வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு
* மேல்நிலை தண்ணீர் தொட்டி